×

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை சரி செய்ய சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் : மாநில போக்குவரத்து ஆணையர்

சென்னை : நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிய வாகனங்களை இயக்க வேண்டாம் என்று வாகன ஓட்டிகளுக்கு மாநில போக்குவரத்து ஆணையர் அறிவுரை வழங்கி உள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வாகனங்கள் பல நீரில் மூழ்கின. இதையடுத்து தண்ணீரில் மூழ்கிய வாகனங்களை அடுத்தகட்டமாக எவ்வாறு பயன்படுத்த வேண்டும், சர்வீஸ் செய்ய வேண்டும் என்பது குறித்து மாநில போக்குவரத்து ஆணையர் சண்முசுந்திரம் வாகன ஓட்டிகளுக்கும் வாகனம் பழுதுபார்க்கும் நபர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அவை பின்வருமாறு…

*நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிய வாகனங்களை இயக்க வேண்டாம்

*மற்ற வாகனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட வாகனத்தை சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மழை பாதிப்பிற்குள்ளான வாகனத்தை சரி செய்யாமல் வாகனத்தை இயக்கும் போது பெரிய அளவு பாதிப்பு நேரிடும்.

*மாவட்டங்களில் உள்ள அனைத்து வாகன விற்பனையாளர்களும் சிறப்பு முகாம் அமைத்து வாகனங்களை சரி செய்யவும், வாகனங்களை மையங்களுக்கு இழுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

*பொதுமக்கள் விண்ணப்பிப்பதற்கும் பரிசீலிப்பதற்கும், ஒப்பளிப்பதற்கும் SUN காப்பீட்டு நிறுவனங்கள் முகாம் நடத்த வேண்டும்.

The post தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை சரி செய்ய சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் : மாநில போக்குவரத்து ஆணையர் appeared first on Dinakaran.

Tags : southern ,Chennai ,Nella ,Tuthukudi ,Districts ,State Transportation Commissioner ,Dinakaran ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...